எனது சகம்
கடவுளாகவும் வேண்டாம்
கல்லாகவும் வேண்டாம்
மலராகவும் வேண்டாம்
மலடியாகவும் வேண்டாம்
விதவையாகவும் வேண்டாம்
விலைமாதாகவும் வேண்டாம்
பேதையாகவும் வேண்டாம்
போதையாகவும் வேண்டாம்
பொம்மையாகவும் வேண்டாம்
மென்மையாகவும் வேண்டாம்
காதலோடும் வேண்டாம்
காமத்தோடும் வேண்டாம்
அடக்கத்தோடும் வேண்டாம்
அடிமையாகவும் வேண்டாம்
சகலமாகவும் வேண்டாம்
சன்னமாகவும் வேண்டாம்
தாயாகவும் வேண்டாம்
தாரமாகவும் வேண்டாம்
அரிகார அடையாளப் பெயர்கள்
அவளுக்கு எதுவும் வேண்டாம்
ஆண் உடளுள்ளம் உணரும் வலியே
பெண் உடளுள்ளம் உணரும் என்னும்
சக உயிர் புரிதலென்ற
சமத்துவமே போதும்.
கல்லாகவும் வேண்டாம்
மலராகவும் வேண்டாம்
மலடியாகவும் வேண்டாம்
விதவையாகவும் வேண்டாம்
விலைமாதாகவும் வேண்டாம்
பேதையாகவும் வேண்டாம்
போதையாகவும் வேண்டாம்
பொம்மையாகவும் வேண்டாம்
மென்மையாகவும் வேண்டாம்
காதலோடும் வேண்டாம்
காமத்தோடும் வேண்டாம்
அடக்கத்தோடும் வேண்டாம்
அடிமையாகவும் வேண்டாம்
சகலமாகவும் வேண்டாம்
சன்னமாகவும் வேண்டாம்
தாயாகவும் வேண்டாம்
தாரமாகவும் வேண்டாம்
அரிகார அடையாளப் பெயர்கள்
அவளுக்கு எதுவும் வேண்டாம்
ஆண் உடளுள்ளம் உணரும் வலியே
பெண் உடளுள்ளம் உணரும் என்னும்
சக உயிர் புரிதலென்ற
சமத்துவமே போதும்.
-அருள்
கருத்துகள்