தேவதையை காதலிப்பவர்கள் கவனத்திற்கு
என் வீட்டிற்க்கு முதல் முறை வந்த அவள்...
இரு கைகள் நீட்டி அவள் பாதம் ஏந்திய வாசல்
எதார்த்தமாய் எட்டிப் பார்பது போல்
ஜன்னல் வழி வந்த தென்றல்
ஜன்னல் வழி வந்த தென்றல்
அவள் அமர்வதற்கு ஏதுவாய் தன்னைச்
சரி செய்து கொண்ட நாற்காலி
சரி செய்து கொண்ட நாற்காலி
அதனைப் பொறாமையுடன் பார்த்து ஆடும் ஊஞ்சல்
இன்னும் அவளை வேகமாக தீண்ட வேண்டும்
என்ற கோரிக்கையுடன்மின்விசிறியை
கெஞ்சும் காற்று
என்ற கோரிக்கையுடன்மின்விசிறியை
கெஞ்சும் காற்று
அவள் முகம் கழுவப் போனதும்
கேலியாக என்னைப் பார்த்து சிரித்தபடியே
மூடும் குளியலறைக் கதவு
கேலியாக என்னைப் பார்த்து சிரித்தபடியே
மூடும் குளியலறைக் கதவு
கடலில் கலக்கப் போன கங்கை நதியை
கர்வமாக தாண்டிச் சென்று சொர்க்கத்தில் கலந்த
அவள் முகம் கழுவிய நீர்
கர்வமாக தாண்டிச் சென்று சொர்க்கத்தில் கலந்த
அவள் முகம் கழுவிய நீர்
அவள் முகம் துடைக்க முன்னால் வர வேண்டும்
என்று அலமாரிக்குள் போர் புரிந்து
வென்று என் கையில் சிக்கிய துணி
என்று அலமாரிக்குள் போர் புரிந்து
வென்று என் கையில் சிக்கிய துணி
எதிர் பாராத அவள் சமையலறை நுழைவில்
சட்டென்று சிலாகித்து
விசில்அடிக்கும் குக்கர்
சட்டென்று சிலாகித்து
விசில்அடிக்கும் குக்கர்
சாப்பிட அவள் தரையில் அமர்ந்ததை சற்றும்
எதிர்பார்க்காமல் ஆனந்த கண்ணீரில்
சில்லென்று ஆன என் வீட்டுத் தரை
எதிர்பார்க்காமல் ஆனந்த கண்ணீரில்
சில்லென்று ஆன என் வீட்டுத் தரை
சாப்பாடு வருவதற்குள் எப்படியும் அவளை ஒரு முறை
அருகில் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்
வெற்றி அடைந்த பளபளக்கும் தட்டு
அருகில் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்
வெற்றி அடைந்த பளபளக்கும் தட்டு
சொர்க்கத்திற்க்குச் செல்லப் போகும்
மகிழ்ச்சியில் அழகழகாக
அணிவகுத்து நின்ற உணவுகள்
மகிழ்ச்சியில் அழகழகாக
அணிவகுத்து நின்ற உணவுகள்
அவள் விரலில் இருந்து தானாக தவறி விழுந்து
உயிர்த் தியாகம் செய்த
பச்சை மிளகாய்
உயிர்த் தியாகம் செய்த
பச்சை மிளகாய்
அவள் சாப்பிட்டு விட்டு எழுந்ததும்
கதறி அழுது நீரில் அடித்துச் செல்லப்பட்ட
சில சபிக்கப்பட்ட பருக்கைகள்
கதறி அழுது நீரில் அடித்துச் செல்லப்பட்ட
சில சபிக்கப்பட்ட பருக்கைகள்
அவள் பார்த்ததும் என் அறை என்று தெரிய வேண்டும்
என்று நெடுங்காலமாக திட்டம் போட்டு
என் அறைக்குள் ஒழுங்கின்றி கிடந்த பொருள்கள்
என்று நெடுங்காலமாக திட்டம் போட்டு
என் அறைக்குள் ஒழுங்கின்றி கிடந்த பொருள்கள்
நான் உள்ளே வந்ததும் அடைத்து விட்டேன்
என்ற பொறாமையில் அவளைநான் நெருங்கும் போது
என் தாயின் குரலில் என்னை அழைத்த என் அறைக் கதவு
என்ற பொறாமையில் அவளைநான் நெருங்கும் போது
என் தாயின் குரலில் என்னை அழைத்த என் அறைக் கதவு
யாருக்கும் தெரியாமல் அவள் எனக்காக
என் அறைக்குள் ஒளித்து வைத்த பரிசை
எப்படியும் களவாடி விட வேண்டும் என்று பதட்டத்தில் பறந்த குப்பைகள்
என் அறைக்குள் ஒளித்து வைத்த பரிசை
எப்படியும் களவாடி விட வேண்டும் என்று பதட்டத்தில் பறந்த குப்பைகள்
போய் வருகிறேன் என்று அவள் கூறிய போது
மின்சாரம் தடை பட்டு என்னைப் போல்
வாய் அடைத்துப் போன என் வீடு
மின்சாரம் தடை பட்டு என்னைப் போல்
வாய் அடைத்துப் போன என் வீடு
அவளை வழி அனுப்பும் போது
வாசலில் நான் பெற்ற நெற்றி முத்தத்தை
எப்படியோ நுகர்ந்து என் தலையில் தட்டிய
என் வீட்டு வாசல்
வாசலில் நான் பெற்ற நெற்றி முத்தத்தை
எப்படியோ நுகர்ந்து என் தலையில் தட்டிய
என் வீட்டு வாசல்
என்னைப் போல் தேவதையை காதலிப்பவர்கள் கவனத்திற்கு
உங்கள் காதலுக்கு எதிரி வெளியில் இல்லை.
-அருள்
கருத்துகள்