வாழ்வாய் தமிழே
மகாகவிக்கு ஒரு கவி மாலை
--------------------------------------------------------------------------
முத்து நகரம் முதன் முதலாய்
மண்ணில் ஒரு முத்து ஈன்ற தினம் இன்று
முத்து நகரம் முதன் முதலாய்
மண்ணில் ஒரு முத்து ஈன்ற தினம் இன்று
முறுக்கிய மீசையையும் முண்டாசுத் துணியையும்
சுருக்கென்ற கவிதையையும் அதன்
கருத்தென்ற இனிமையையும்
மறந்திடுமோ மறவத் தமிழினம்
சுருக்கென்ற கவிதையையும் அதன்
கருத்தென்ற இனிமையையும்
மறந்திடுமோ மறவத் தமிழினம்
குருவிகளை கொஞ்சிடுவான்
காளியிடம் மிஞ்சிடுவான்
கண்ணன் என்றால் காதல் கொள்வான்
மன்னன் என்றாலும் ஏவல் செய்வான்
காளியிடம் மிஞ்சிடுவான்
கண்ணன் என்றால் காதல் கொள்வான்
மன்னன் என்றாலும் ஏவல் செய்வான்
நெருப்புத் தெறிக்கும் விடுதலைக் கவியும் இவனே
நெஞ்சோடு அணைக்கும் இயற்கைக் கவியும் இவனே
தொட்டுத் தழுவும் காதல் கவியும் இவனே
விண் எட்டிப் பறந்திடும் விலாசக் கவியும் இவனே
நெஞ்சோடு அணைக்கும் இயற்கைக் கவியும் இவனே
தொட்டுத் தழுவும் காதல் கவியும் இவனே
விண் எட்டிப் பறந்திடும் விலாசக் கவியும் இவனே
பாப்பாக்களுக்கு கவிதை என்றால் ஊட்டி விடுவான்
பாஞ்சாலிகளுக்கு கவிதை என்றால் பற்றி எறிவான்
பாரதக் கவிதை என்றால் வெடித்து விடுவான்
செல்லம்மாவின் கவிதையில் மட்டும் கொஞ்சம் சிரித்து விடுவான்
பாஞ்சாலிகளுக்கு கவிதை என்றால் பற்றி எறிவான்
பாரதக் கவிதை என்றால் வெடித்து விடுவான்
செல்லம்மாவின் கவிதையில் மட்டும் கொஞ்சம் சிரித்து விடுவான்
இமயம் தமிழுக்கு என்பான்
இசையும் தமிழுக்கு என்பான்
கடவுள் தமிழுக்கு என்பான்
கைப்பிடி மண் கூட தமிழுக்கு என்பான்
மரமும் தமிழுக்கு என்பான்
மனிதனும் தமிழுக்கு என்பான்
தரணியே தமிழுக்கு என்றவன்
தன்னையும் தமிழுக்குள் வார்த்தெடுத்தான்
தன்னையே தரத் துணிந்த தமிழில் கூட
பெண்மை அடங்கி விடக் கூடாது என்பான்
இசையும் தமிழுக்கு என்பான்
கடவுள் தமிழுக்கு என்பான்
கைப்பிடி மண் கூட தமிழுக்கு என்பான்
மரமும் தமிழுக்கு என்பான்
மனிதனும் தமிழுக்கு என்பான்
தரணியே தமிழுக்கு என்றவன்
தன்னையும் தமிழுக்குள் வார்த்தெடுத்தான்
தன்னையே தரத் துணிந்த தமிழில் கூட
பெண்மை அடங்கி விடக் கூடாது என்பான்
பெண்ணியம் பேசுவார்
பெண்ணியம் எழுதுவார்
பெண்ணியம் பேணிட பிறந்தவன் நான் என்பார் கூட
பெண்ணாக மாறுவாரா என்றால்?
பிதற்றாதே என்பார்
பெண்ணியம் எழுதுவார்
பெண்ணியம் பேணிட பிறந்தவன் நான் என்பார் கூட
பெண்ணாக மாறுவாரா என்றால்?
பிதற்றாதே என்பார்
அந்த முறுக்கிய மீசைக்குள்
எத்தனை ஆசைகள் பெண்ணிய விடுதலையில்
எத்தனை ஆசைகள் பெண்ணிய விடுதலையில்
கண்ணனை காதல் செய்ய
தன்னையே பெண்ணாக எண்ணி
கவிதை வார்த்திட்டான்
கணவன் என்று கண் பாராமல் பேசும்
கண்மணி தன் மனைவி தோளில் கைபோட்டு
தோழி நீயடி என்னை நிமிர்ந்து பாரடி என்ற போது
கை ஏட்டில் மட்டுமே இருந்த பெண்ணியம்
கர்வமாக உருவம் தரித்தது பாரதி என்று
தன்னையே பெண்ணாக எண்ணி
கவிதை வார்த்திட்டான்
கணவன் என்று கண் பாராமல் பேசும்
கண்மணி தன் மனைவி தோளில் கைபோட்டு
தோழி நீயடி என்னை நிமிர்ந்து பாரடி என்ற போது
கை ஏட்டில் மட்டுமே இருந்த பெண்ணியம்
கர்வமாக உருவம் தரித்தது பாரதி என்று
ஆனந்தக் கூத்தாடி கிடைக்காத
சுதந்திரத்திற்கு கும்மி அடித்தவன்
சுதந்திரத்திற்கு கும்மி அடித்தவன்
புதுமைப் பெண்ணை நோக்கி
போற்றிப் பாடியவன்
போற்றிப் பாடியவன்
மனத்திற்க்கு கட்டளை இட்டு
கட்டி வைத்தவன்
கட்டி வைத்தவன்
காலனை அழைத்து தன்
காலடி சேரச் சொன்னவன்
காலடி சேரச் சொன்னவன்
மாயையை மறுத்து
மயங்காதிருந்தவன்
மயங்காதிருந்தவன்
முரசு கொட்டி தமிழின்
வெற்றி அறிவித்தவன்
வெற்றி அறிவித்தவன்
நிரந்தரமாக அயர்ந்து தூங்கச் சென்ற போது
நிசப்தமானதேனோ? தமிழே
நிசப்தமானதேனோ? தமிழே
கோவில் பாடல்களிலும்
கோமான்களின் புகழ் பாக்களிலும்
புழுதிப் படிந்து கிடந்த தமிழே
கோமான்களின் புகழ் பாக்களிலும்
புழுதிப் படிந்து கிடந்த தமிழே
உன்னைப் புதிப்பித்து புத்துயிர் தந்த
உன் புதல்வன் உறங்கிப் போன போது
தாலாட்டுக்காக வேண்டாம்
தாய்வீட்டுச் சொந்தம் என்றாவது
நூறு தமிழர்களை அனுப்பி இருந்தால்...
உன் புதல்வன் உறங்கிப் போன போது
தாலாட்டுக்காக வேண்டாம்
தாய்வீட்டுச் சொந்தம் என்றாவது
நூறு தமிழர்களை அனுப்பி இருந்தால்...
தமிழால் பாரதி வாழ்ந்தான் என்று மார் தட்டி இருப்பேன்
ஆனால், பரிதாபம் உனக்கே
பாரதியாலேயே நீ வாழ்ந்தாய் வாழ்கிறாய் வாழ்வாய்
வாழ்ந்து விட்டுப் போ
ஆனால், பரிதாபம் உனக்கே
பாரதியாலேயே நீ வாழ்ந்தாய் வாழ்கிறாய் வாழ்வாய்
வாழ்ந்து விட்டுப் போ
-அருள்
கருத்துகள்