சில்லென்ற தீப்பொறி
ஒரு கவியாக பெண்மையில் லயித்து பெண்மையில் மயங்கி கவிதை தர முடியாமைக்கு உங்களுக்காக வருந்துகிறேன். ஆனால், பெண்மைக்காக ஒரு கவிதை என்ற நோக்கில் எனக்காக என் சக இனத்திற்காக நான் கர்வம் கொள்கிறேன். கவனம் இவள் சில்லென்ற ஒருத்தி தான் ஆனால், தீப்பொறி சற்று தள்ளி நின்றே ரசியுங்கள் தைரியம் இருந்தால்.....
பேதை மடந்தை பரத்தை மலடி?
பெற்றாள் பெறுவாள் பெறுகிறாள் அவள்
பெற்றாள் பெறுவாள் பெறுகிறாள் அவள்
நேற்றும் இன்றும் நாளையும் என்றும்?
தொழுதார் தொழுவார் கல்லில் மட்டும்
தொழுதார் தொழுவார் கல்லில் மட்டும்
நித்தம் நித்தம் நிசப்தம் நிரந்தரம்?
சொன்னால் சொல்வார் உன் நிலை நோக்கென்று
சொன்னால் சொல்வார் உன் நிலை நோக்கென்று
நியாயம் தர்மம் தெய்வம் உலகம்?
அயர்ந்து தூங்கும் அசையாதிருக்கும்
அயர்ந்து தூங்கும் அசையாதிருக்கும்
சுயம் சுபம் சமம் சுதந்திரம்?
சுட்டார் இட்டார் அவருக்கு போக
சுட்டார் இட்டார் அவருக்கு போக
ஏன் எதற்கு எப்படி இப்படி?
அதன் படி இதன் படி உன் பிறப்பே உனக்கு கல்லடி
அதன் படி இதன் படி உன் பிறப்பே உனக்கு கல்லடி
நிதானம் பொறுமை போராட்டம் இறுக்கம்?
போதும் போதும் அது பழைய சாதம்
போதும் போதும் அது பழைய சாதம்
எதிர்த்து நிமிர்ந்து திமிர்ந்து உயர்ந்து?
உன் சொந்த உறவுகள் உதறும் உதாசிக்கும்
உன் சொந்த உறவுகள் உதறும் உதாசிக்கும்
தீர்க்கம் தீர்வு முடிவு?
உன் உள்ளங்கை உள்ளம் இரண்டும் இரும்பாகட்டும்
உன் உள்ளங்கை உள்ளம் இரண்டும் இரும்பாகட்டும்
பெண்மை மென்மை என்னும் தொன்மை?
காரி உமிழ்ந்து கசக்கி எரி காற்றில் கரையட்டும்
காரி உமிழ்ந்து கசக்கி எரி காற்றில் கரையட்டும்
பண்பாடு கலாச்சாரம் வரலாறு ஏடு?
அடங்கல் அடக்கல் கற்பு ஒழுக்கம் இவை இரு பால் பொதுவே
அடங்கல் அடக்கல் கற்பு ஒழுக்கம் இவை இரு பால் பொதுவே
சமூகம் குடும்பம் நேற்றைய பழக்கம்?
முட்டும் மோதும் கதறும் முடக்கும்
முட்டும் மோதும் கதறும் முடக்கும்
தனிமை கொடுமை வறுமை வெறுமை?
விருட்சம் பிறக்க விதை கிழிய வேண்டும்
விருட்சம் பிறக்க விதை கிழிய வேண்டும்
வருத்தம் வருத்தம் என் சுயம் என்ன ஆகும்?
புதியதாய் பிறக்கும் நீ திருத்திய சரித்திரமாய் சிரிக்கும்
சில்லென்ற சிறு தீப்பொறியைக் கண்டு சூரியனுக்கும் வியர்க்கும்.
சில்லென்ற சிறு தீப்பொறியைக் கண்டு சூரியனுக்கும் வியர்க்கும்.
-அருள்
கருத்துகள்