ஆயிரம் முத்தங்கள்
அன்று ஆம் அதே அன்று
அவளை முதல் முறை கண்ட கல்லூரியின் முதல் நாள்
என் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த முதல் நாள்
அந்த முதல் பார்வைத் தீண்டலில் தெறித்துச் சிதறியது
ஆயிரம் முத்தங்கள்
அவளை முதல் முறை கண்ட கல்லூரியின் முதல் நாள்
என் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த முதல் நாள்
அந்த முதல் பார்வைத் தீண்டலில் தெறித்துச் சிதறியது
ஆயிரம் முத்தங்கள்
பார்வைத் தாக்குதலில் சற்று பதறிப் போன
நான் நிலை கொண்டது என்னவோ
நிலை இல்லாத இடை அசைவில்தான்
கணிதத்தின் வடிவங்களில்
எரிச்சல் அடைந்த எனக்கு
அந்த வளைவுகள் தான்
ஆயிரம் முத்தங்கள்
நான் நிலை கொண்டது என்னவோ
நிலை இல்லாத இடை அசைவில்தான்
கணிதத்தின் வடிவங்களில்
எரிச்சல் அடைந்த எனக்கு
அந்த வளைவுகள் தான்
ஆயிரம் முத்தங்கள்
சொட்டச் சொட்ட கனி ரசம் இருந்தும்
அதை எட்ட எட்டத் தள்ளி வைக்கும்
அந்த இரக்கமற்ற நாட்களில்
உன் நுனி விரல் தீண்டல் தான் எனக்கு
ஆயிரம் முத்தங்கள்
அதை எட்ட எட்டத் தள்ளி வைக்கும்
அந்த இரக்கமற்ற நாட்களில்
உன் நுனி விரல் தீண்டல் தான் எனக்கு
ஆயிரம் முத்தங்கள்
தோழி மட்டுமே நான் என்று நீ பொய் உரைக்க
வேலிக்குள் வேகும் என் இதயம் ம்ம்ம் என்று தலை அசைக்க
உன் கண்களின் ஓரம் நான் கண்ட காதலில்
என் மேல் விழுந்து விலகி ஓடியது
ஆயிரம் முத்தங்கள்
வேலிக்குள் வேகும் என் இதயம் ம்ம்ம் என்று தலை அசைக்க
உன் கண்களின் ஓரம் நான் கண்ட காதலில்
என் மேல் விழுந்து விலகி ஓடியது
ஆயிரம் முத்தங்கள்
உடலில் ஒரு தலை போதும் உயிரைத் தாங்க
காதலில் ஒரு தலை போதும் உயிரை வாங்க
மரணம் வரும் தருவாயில் எல்லாம்
எனக்கு உயிர் பிச்சை அளித்த
உன் துப்பட்டாத் தீண்டல்கள் தான்
ஆயிரம் முத்தங்கள்
காதலில் ஒரு தலை போதும் உயிரை வாங்க
மரணம் வரும் தருவாயில் எல்லாம்
எனக்கு உயிர் பிச்சை அளித்த
உன் துப்பட்டாத் தீண்டல்கள் தான்
ஆயிரம் முத்தங்கள்
அந்த நாள் ஆம் அதே நாள்
என்னுள் தேக்கி வைத்திருந்த அத்தனைக் காதலையும்
நீ கரை உடைத்து உன்னுள் ஏற்றுக் கொண்ட நாள்
மொழிகள் ஊமையாகி நீ கண்ணில்
உன் காதலை சொன்ன அதே நாள்
உன் கண்ணீரில் என் மேல் வழிந்தோடியது
ஆயிரம் முத்தங்கள்
என்னுள் தேக்கி வைத்திருந்த அத்தனைக் காதலையும்
நீ கரை உடைத்து உன்னுள் ஏற்றுக் கொண்ட நாள்
மொழிகள் ஊமையாகி நீ கண்ணில்
உன் காதலை சொன்ன அதே நாள்
உன் கண்ணீரில் என் மேல் வழிந்தோடியது
ஆயிரம் முத்தங்கள்
உனக்கும் எனக்கும் இதுதான் முதல் முறை
உன் அருகில் கர்வமாக நானும்
கல்யாண கோலத்தில் கலக்கமாக நீயும்
தாலியை கண்டதும் யாருக்கும் தெரியாமல்
நீ என் விரலை அழுத்தமாக பிடித்து அமுக்க
நெட்டி உடைந்து என் நெஞ்சில் சிதறியது
ஆயிரம் முத்தங்கள்
உன் அருகில் கர்வமாக நானும்
கல்யாண கோலத்தில் கலக்கமாக நீயும்
தாலியை கண்டதும் யாருக்கும் தெரியாமல்
நீ என் விரலை அழுத்தமாக பிடித்து அமுக்க
நெட்டி உடைந்து என் நெஞ்சில் சிதறியது
ஆயிரம் முத்தங்கள்
உன் அழகிய வளைவுகளை திருடி விட்டு
உனக்குள் ஒய்யாரமாக ஒளிந்து இருக்கிறாள்
உன்னை போல் ஒரு குட்டி ராட்சசி
மேடான உன் வயிறு தொட்டு
நான் முத்தமிடும் வேலை எல்லாம்
கோபித்துக் குதிக்கிறாள் அவள் அதை
நீ புரிந்து கொள்ளாமல் அவள் சிரிக்கிறாள் என்கிறாய்
உன் வெகுளித் தனம் கண்டு
நான் உன் பாதம் வருடும் வேளையிலே
உன் மெட்டிச் சிணுங்கல் சிந்தியது
ஆயிரம் முத்தங்கள்
உனக்குள் ஒய்யாரமாக ஒளிந்து இருக்கிறாள்
உன்னை போல் ஒரு குட்டி ராட்சசி
மேடான உன் வயிறு தொட்டு
நான் முத்தமிடும் வேலை எல்லாம்
கோபித்துக் குதிக்கிறாள் அவள் அதை
நீ புரிந்து கொள்ளாமல் அவள் சிரிக்கிறாள் என்கிறாய்
உன் வெகுளித் தனம் கண்டு
நான் உன் பாதம் வருடும் வேளையிலே
உன் மெட்டிச் சிணுங்கல் சிந்தியது
ஆயிரம் முத்தங்கள்
சில நாட்களாக எனக்கு உன்னைத் தவிர வேறு
ஏதும் கண்ணில் தெரிவதில்லை
உன் கால்களோ நான் இல்லாமல்
தனியே எங்கும் செல்வதில்லை
எனக்கு நீ கண்ணாகவும்
உனக்கு நான் காலாகவும்
இருந்த முதுமை முழுக்க
நமக்குள் நிறைந்து இருந்தது
ஆயிரம் முத்தங்கள்
ஏதும் கண்ணில் தெரிவதில்லை
உன் கால்களோ நான் இல்லாமல்
தனியே எங்கும் செல்வதில்லை
எனக்கு நீ கண்ணாகவும்
உனக்கு நான் காலாகவும்
இருந்த முதுமை முழுக்க
நமக்குள் நிறைந்து இருந்தது
ஆயிரம் முத்தங்கள்
நீயும் நானும் அந்த இரவில் என்ன பேசவில்லை
ஏதேதோ பேசினோம்
என்னவோ சொல்லி சிரித்தோம்
என் மேல் நீயும் உன் மேல் நானும்
ஒன்றாக கட்டி அணைத்து கண் மூடினோம்
கண் விழித்ததாக நினைவு இல்லை
என் நினைவில் அன்று இருந்தது எல்லாம்
நாம் கண் மூடிய பிறகு
நான் தூங்கி விட்டதாக நீ எண்ணி
என் முகம் எங்கும் நீ கொடுத்த அந்த
ஆயிரம் முத்தங்கள்
ஏதேதோ பேசினோம்
என்னவோ சொல்லி சிரித்தோம்
என் மேல் நீயும் உன் மேல் நானும்
ஒன்றாக கட்டி அணைத்து கண் மூடினோம்
கண் விழித்ததாக நினைவு இல்லை
என் நினைவில் அன்று இருந்தது எல்லாம்
நாம் கண் மூடிய பிறகு
நான் தூங்கி விட்டதாக நீ எண்ணி
என் முகம் எங்கும் நீ கொடுத்த அந்த
ஆயிரம் முத்தங்கள்
-அருள்
கருத்துகள்