கவி உதிர் காலம்
என் இனிய சகோக்களே சகிகளே
உங்கள் இதயத்தின் மீது குடை பிடித்துக்கொள்ளுங்கள்
இது கவி உதிர் காலம்...
சில கவிகள் உங்கள் நினைவுகளை சீண்டலாம்
சில கவிகள் உங்கள் உணர்வுகளை உரசலாம்
சில குறும்புக்கார கவிகள் உங்கள் இதழோரத்தையும்
சில கண்டிப்பான கவிகள் உங்கள் விழியோரத்தையும்
ஈரம் செய்யலாம்
சில கள்ளதனக் கவிகள் உங்களை களவாடலாம்
சில வில்லத்தனக் கவிகள் உங்களை விழுங்கவும் செய்யலாம்
சில குழந்தைத்தனக் கவிகள் உங்களிடம் கொஞ்சி விளையாடலாம்
சில அன்னைமார் கவிகள் உங்களை அரவணைக்கவும் செய்யலாம்
கவனமாக இருங்கள் இது கவி உதிர் காலம்...
கவிதைகள் ஜாக்கிரதை...
-அருள்
கருத்துகள்