பெண்மையை மாற்றுவோம்
உயிர்த் துளிக்கு உருவம் தந்த என் அன்னைக்கும்
அன்னையின் அடுத்த உருவான என் மனைவிக்கும்
சக உயிரான என் சகோதரிக்கும்
மறு உயிரான என் தோழிக்கும்
இந்தக் கவிதை சமர்ப்பணம்...
...............................................................................
அன்னையின் அடுத்த உருவான என் மனைவிக்கும்
சக உயிரான என் சகோதரிக்கும்
மறு உயிரான என் தோழிக்கும்
இந்தக் கவிதை சமர்ப்பணம்...
...............................................................................
போதுமடி பெண்ணே உன் ரோஜா அவதாரங்கள்
முட்களாகவும் முயன்று பார்
முட்களாகவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் அன்பு ஸ்பரிசங்கள்
அனலாகவும் முயன்று பார்
அனலாகவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் கடைக்கண் மின்னல்கள்
இடிகளாகவும் முயன்று பார்
இடிகளாகவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் மெல்லிசை சிணுங்கல்கள்
கர்ஜனைகளையும் முயன்று பார்
கர்ஜனைகளையும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் அன்ன நடைகள்
வேங்கையகாவும் முயன்று பார்
வேங்கையகாவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் அரிகாரங்கள்
உண்மைகளையும் முயன்று பார்
உண்மைகளையும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் வளைவுகளின் வசியங்கள்
நேர்கொண்டு திமிர முயன்று பார்
நேர்கொண்டு திமிர முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் கலவி போதிக்கும் கல்யாண சுகங்கள்
சுயம்புவாகவும் முயன்று பார்
சுயம்புவாகவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் உரிமை போராட்டங்கள்
உதைத்துத் தள்ள முயன்று பார்
உதைத்துத் தள்ள முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் போலிப் புன்னகைகள்
கோரப் பார்வைகளையும் முயன்று பார்
கோரப் பார்வைகளையும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் ரகசிய அழுகைகள்
ரௌத்திரமும் முயன்று பார்
ரௌத்திரமும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் தினசரி தியாகங்கள்
சுயநலத்தையும் முயன்று பார்
சுயநலத்தையும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் நிலம் விழுந்த பார்வைகள்
நிமிர்ந்து நிற்கவும் முயன்று பார்
நிமிர்ந்து நிற்கவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன் வரையறை வரைந்த எல்லைகள்
புது வரலாறு எழுதவும் முயன்று பார்
புது வரலாறு எழுதவும் முயன்று பார்
போதுமடி பெண்ணே உன்னைப் பேண மறந்த பெண்ணியங்கள்
பிரபஞ்சம் பிளக்கவும் முயன்று பார்
பிரபஞ்சம் பிளக்கவும் முயன்று பார்
-அருள்
கருத்துகள்