சிதறிய சில பார்வைத் துணுக்குகள்
எங்கே என் ரம்யமான காலை ??
அதோ தெரிகிறது புகைகளுக்குப் பின்னால்
எங்கே என் இனிமையான கீதம்???
அதோ அழுகிறது இரைச்சல்களுக்குப் பின்னால்
அதோ அழுகிறது இரைச்சல்களுக்குப் பின்னால்
எங்கே என் அழகான அம்மா???
அதோ கருகுகிறாள் வெண்மையான தோசைகளுக்குப் பின்னால்
எங்கே என் கம்பீரமான அப்பா???
அதோ உருகுகிறார் உதட்டோர சிரிப்புகளின் பின்னால்
எங்கே என் ஆருயிர்த் தோழி???
அதோ பதுங்குகிறாள் அன்பான கணவனுக்குப் பின்னால்
எங்கே என் அழகான சகோதரி???
அதோ ஒதுங்குகிறாள் அவள் புகுந்த உறவுகளுக்குப் பின்னால்
எங்கே என் அடாவடி அண்ணன்???
அதோ ஓடுகிறான் அவனுக்கென்ற வாழ்க்கையின் பின்னால்
எங்கே என் உயிர்த் தோழன்???
அதோ கதறுகிறான் அவன் குடும்பநிலைக்குப் பின்னால்
எங்கே என் கலாச்சாரம்???
அதோ பறக்கிறது துப்பட்டாகளுக்குப் பின்னால்
எங்கே என் சமுதாயம்???
அதோ சாக கிடக்கிறது ஜாதி மதங்களின் பின்னால்
எங்கே என் கடந்த காலம்???
அதோ களவாடப் படுகிறது நவீனமாக்களின் பின்னால்
எங்கே என் எதிர்காலம்???
அதோ இறந்து கிடக்கிறது இங்கிலிஷின் பின்னால்
எங்கே என் நிகழ் காலம்???
இதோ கண்ணீர் வடிக்கிறது என் கவிதைகளுக்குப் பின்னால்
கண்களே!!! கண்களே!!! இமைகளை இறுக பிடித்துக் கொள்ளுங்கள்...
-அருள்
கருத்துகள்