உழவரெனும் உயர்தினைக் கூட்டம்

பருத்தி எல்லாம் பதறும் என்று ஆடை குறைத்தார் பச்சை பூமியது பார்த்த போது வெற்று பாதம் பூண்டார் விழும் வெயிலது குளிக்க இவர் வியர்வை சுரந்தார் விண் மழை வந்து தங்க இவர் மண் வீடு புகுந்தார் செடி எல்லாம் சிரிக்க இவர் சிலிர்த்துக் கொண்டார் சேவலுக்கு பசிக்கும் போது இவர் விழித்துக் கொண்டார் கலப்பைக்குத் தோள் தருவார் மண்ணுக்குப் பால் தருவார் காளைக்கு ஓலை முடைவார் பாலையிலும் பசுமை வரைவார் கன்று எங்கள் பிள்ளை என்பார் பசு எங்கள் அன்னை என்பார் ஒத்த குடிசை எங்கள் மாடம் என்பார் ஒரே சொத்து மானம் என்பார் வஞ்சிலா நெஞ்சம் கொண்டார் கஞ்சிலா கவலையும் கண்டார் எஞ்சிலா நிலையில் கூட மிஞ்சியது போதும் என்பார் உடல் மண் பட்டார் மனம் புண் பட்டார் உயிர் அடி பட்டார் உடைமை பல விட்டார் உயர் நகரமயமாதலில் விடுபட்டார்-அதை எண்ணி எள்ளி நகையுற்றார் பொய்த்த தெய்வம் மழையென்றார் வறண்ட வேதம் நிலமென்றார் கலைந்து போன கரு எங்கள் விதையென்றார் பிரிந்து போன உயிரெங்கள் பயிரென்றார் தொழுதார் அழுதார் உழுதார் உயிர் காக்கும் உத்தமரினத்தார் - தன் வயிர் காக்கும் வித்தையை மறந்தார் இரந்துண்டு வாழ்வதறியார...