இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உழவரெனும் உயர்தினைக் கூட்டம்

படம்
பருத்தி எல்லாம் பதறும் என்று ஆடை குறைத்தார் பச்சை பூமியது பார்த்த போது வெற்று பாதம் பூண்டார் விழும் வெயிலது குளிக்க இவர் வியர்வை சுரந்தார் விண் மழை வந்து தங்க இவர் மண் வீடு புகுந்தார் செடி எல்லாம் சிரிக்க இவர் சிலிர்த்துக் கொண்டார் சேவலுக்கு பசிக்கும் போது இவர் விழித்துக் கொண்டார் கலப்பைக்குத் தோள் தருவார் மண்ணுக்குப் பால் தருவார் காளைக்கு ஓலை முடைவார் பாலையிலும் பசுமை வரைவார் கன்று எங்கள் பிள்ளை என்பார் பசு எங்கள் அன்னை என்பார் ஒத்த குடிசை எங்கள் மாடம் என்பார் ஒரே சொத்து மானம் என்பார் வஞ்சிலா நெஞ்சம் கொண்டார் கஞ்சிலா கவலையும் கண்டார் எஞ்சிலா நிலையில் கூட மிஞ்சியது போதும் என்பார் உடல் மண் பட்டார் மனம் புண் பட்டார் உயிர் அடி பட்டார் உடைமை பல விட்டார் உயர் நகரமயமாதலில் விடுபட்டார்-அதை எண்ணி எள்ளி நகையுற்றார் பொய்த்த தெய்வம் மழையென்றார் வறண்ட வேதம் நிலமென்றார் கலைந்து போன கரு எங்கள் விதையென்றார் பிரிந்து போன உயிரெங்கள் பயிரென்றார் தொழுதார் அழுதார் உழுதார் உயிர் காக்கும் உத்தமரினத்தார் - தன் வயிர் காக்கும் வித்தையை மறந்தார் இரந்துண்டு வாழ்வதறியார...

நிர்பய வேள்வி

படம்
நிர்பயாக்களுக்கு சமர்ப்பணம் ------------------------------------------------------------------------------ தேசிய கீதத்திற்குத் தலை நிமிரும் ஆண்களே நிர்பய வேள்வி முன் தலை கவிழுங்கள் அழகோவியத்தில் அரியாசனித்த அவதாரப் புருஷர்களே அடிமையாகிப் போனீரோ ஆடை அவிழ்ப்பிற்கு? கனவுகளில் காட்சி தரும் கடவுள் மார்களே கண்ணயர்ந்து போனீரோ கதறல் தாலாட்டிற்கு? கண் கட்டி வாயடக்கி கருப்பு அங்கிக்குள் சட்டம் தேடும் நீதிமான்களே நின்று பதில் சொல்லுங்கள் நிர்பய வேள்வி முன்... பெண்னென்றீர் என்னைப் பொன்னென்றீர் நான் கண்னென்றீர் எனைப் பேணென்றீர் ஊனென்று என்னை உரைத்ததெவரோ? ஒரு நிமிட பசிக்கு விலை எனதுயிரோ? அன்னை என்றீர் எனைத் தங்கை என்றீர் அன்புத் தோழி என்றீர் சிலர் காளி என்றீர் சக மனிதி நானென்பதை மறந்ததெவரோ? சடலத்தில் சபலம் தேடுமிவர் மிருக சமூகத்தின் மகரோ? கண் பார்த்தால் கர்வம் என்றீர் கைப்பட்டால் காதல் என்றீர் மெய்மறந்து சிரிக்கையிலே மேனி கண்டீர் பொய் வேஷம் கண்டு சினந்த போது வேசி என்றீர் வாழ்க்கை வலி என்பீர் சிலர் வழுக்கை கூட வலி என்பீர் கண்ணைத் தூசி தொட்டால் ஊசி தொட்டது போல் துட...

வாழ்வாய் தமிழே

படம்
மகாகவிக்கு ஒரு கவி மாலை -------------------------------------------------------------------------- முத்து நகரம் முதன் முதலாய் மண்ணில் ஒரு முத்து ஈன்ற தினம் இன்று முறுக்கிய மீசையையும் முண்டாசுத் துணியையும் சுருக்கென்ற கவிதையையும் அதன் கருத்தென்ற இனிமையையும் மறந்திடுமோ மறவத் தமிழினம் குருவிகளை கொஞ்சிடுவான் காளியிடம் மிஞ்சிடுவான் கண்ணன் என்றால் காதல் கொள்வான் மன்னன் என்றாலும் ஏவல் செய்வான் நெருப்புத் தெறிக்கும் விடுதலைக் கவியும் இவனே நெஞ்சோடு அணைக்கும் இயற்கைக் கவியும் இவனே தொட்டுத் தழுவும் காதல் கவியும் இவனே விண் எட்டிப் பறந்திடும் விலாசக் கவியும் இவனே பாப்பாக்களுக்கு கவிதை என்றால் ஊட்டி விடுவான் பாஞ்சாலிகளுக்கு கவிதை என்றால் பற்றி எறிவான் பாரதக் கவிதை என்றால் வெடித்து விடுவான் செல்லம்மாவின் கவிதையில் மட்டும் கொஞ்சம் சிரித்து விடுவான் இமயம் தமிழுக்கு என்பான் இசையும் தமிழுக்கு என்பான் கடவுள் தமிழுக்கு என்பான் கைப்பிடி மண் கூட தமிழுக்கு என்பான் மரமும் தமிழுக்கு என்பான் மனிதனும் தமிழுக்கு என்பான் தரணியே தமிழுக்கு என்றவன் தன்னையும் தமிழுக்குள் வார்த்த...

எனது சகம்

படம்
கடவுளாகவும் வேண்டாம் கல்லாகவும் வேண்டாம் மலராகவும் வேண்டாம் மலடியாகவும் வேண்டாம் விதவையாகவும் வேண்டாம் விலைமாதாகவும் வேண்டாம் பேதையாகவும் வேண்டாம் போதையாகவும் வேண்டாம் பொம்மையாகவும் வேண்டாம் மென்மையாகவும் வேண்டாம் காதலோடும் வேண்டாம் காமத்தோடும் வேண்டாம் அடக்கத்தோடும் வேண்டாம் அடிமையாகவும் வேண்டாம் சகலமாகவும் வேண்டாம் சன்னமாகவும் வேண்டாம் தாயாகவும் வேண்டாம் தாரமாகவும் வேண்டாம் அரிகார அடையாளப் பெயர்கள் அவளுக்கு எதுவும் வேண்டாம் ஆண் உடளுள்ளம் உணரும் வலியே பெண் உடளுள்ளம் உணரும் என்னும் சக உயிர் புரிதலென்ற சமத்துவமே போதும். -அருள்

தித்தித்த திங்கள் கிழமைகள்

படம்
மனம் ஏங்குதே திடீர் என்று நினைவில் தோன்றும்  திங்கள் கிழமை வீட்டு பாடங்களுக்கு மனம் ஏங்குதே. கணிதத் தேர்விற்கு அறிவியல் படித்துச் செல்ல மனம் ஏங்குதே. இறுதி வரை தொட்டுப் பார்க்கப் பயந்த  விலங்கியல் எலும்புக்கூட்டைத் தொட மனம் ஏங்குதே. புதிதாக அட்டை போடப்பட்ட நோட்டுகளை  நுகர்ந்து பார்த்திட மனம் ஏங்குதே. கரும்பலகையின் உயரத்தில்  என் பெயர் கிறுக்க மனம் ஏங்குதே. அடிக்கு பயந்து ஓடிய படிக்கட்டுகளில்  தலை சாய்த்து அமர மனம் ஏங்குதே. பயம் கொண்டு பதுங்கி மறைந்து நின்ற  தூண்களை கட்டி அணைத்திடவே மனம் ஏங்குதே. பிரம்புகளுக்கும் மேசைகளுக்கும்  முட்டி இட்டு முத்தம் தந்திட மனம் ஏங்குதே. தேர்வு அறைகளில் பயந்து வெறித்து  நோக்கிய வெள்ளைத்தாள்களுக்கு மனம் ஏங்குதே. அடுத்த நாள் விடுப்புகள் பொருட்டு  முந்தைய நாள் இரவு வரும் காய்ச்சல்களுக்கு மனம் ஏங்குதே. அறிவிப்பின்றி வரும் மரண விடுமுறைகளுக்கு  கொஞ்சம் வருந்தவும் மனம் ஏங்குதே. நான் புதைத்து வைத்த மாங்காய் விதை  முளைத்ததைக் காணவே மனம் ஏங்குதே. திருட்டுத் தனமாய் கிற...

உறக்கம் கலைவாயடா

படம்
என் செல்வமே என் செல்லமே உறக்கம் கலைவாயடா அப்பன் வழி அஹிம்சை என உன் அன்னையை சீண்டி பார்க்கிறார்கள் உறக்கம் கலைவாயடா சுதந்திரமும் சுவாசமும் சுழற்சி முறையில் மாசு படுகின்றன உறக்கம் கலைவாயடா என் அணிகளைத் திருடிய கூட்டம் இப்போது ஆடையைக் குறி வைக்கின்றன உறக்கம் கலைவாயடா உன் தாயின் சாயல்கள் ஊரெங்கும் உருக்குலைக்கப் படுகின்றார்கள்  உறக்கம் கலைவாயடா ஊமைகளின் கரங்கள் மட்டுமே உதவிக்கு வருகின்றன உறக்கம் கலைவாயடா பொக்ரானில் புல் முளைத்ததென பொக்கை வாயர்கள் சிரிக்கிறார்கள் உறக்கம் கலைவாயடா அடுப்பெரிக்கும் மின்சாரத்திற்கு அணுக்கள் பிளக்கப் படுகின்றன உறக்கம் கலைவாயடா அரியாசனங்கள் உன் வாசங்களை மறக்க முற்படுகின்றன உறக்கம் கலைவாயடா வெள்ளை நாய் மேய்க்கும் வேற்றுலக ஜீவராசிகள் என் தலை விதி எழுதுகின்றன உறக்கம் கலைவாயடா உன்னைக் களவாட நினைத்த கரங்கள் என்னை விலங்கு போட்டு விசாரிக்கின்றன உறக்கம் கலைவாயடா வேளாண்மை தீண்டாமையாக மாற்றப்படுகிறது உறக்கம் கலைவாயடா மூலைக்கு மூலை உன்னைப் போன்ற மூளைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன உறக்கம் கலைவாயடா பள்ளிகளும் பல்லிகள...

பசலை

படம்
தமிழை விட காதலை அழகு படுத்த எந்த மொழியால் முடியும். காதலையும் வீரத்தையும் அல்லவா எங்கள் முன்னோர்கள் இரு கண்களாக கருதினார்கள். அப்படிப்பட்ட தமிழ் வழித் தோன்றிய இலக்கியங்களுள் காதலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இலக்கியங்கள் ஏராளம். காதல் ஒரு விசித்திர மிருகம் அது அணைத்தாலும் இனிக்கும் அடித்தாலும் இனிக்கும். அப்படிப் பட்ட காதல் துயர் தமிழ் இலக்கியங்களில் அதிகம் பெண்களையே தாக்குகிறது. அதிர்ஷ்டசாலிகள் அவர்கள் காதலின் இருமுக இன்பங்களையும் அனுபவிக்கிறார்கள். "பசலை" ஒரு அழகிய துயரத் தை குறிக்கும் சொல். காதலனை பிரிந்த காதலி அவன் பிரிவை எண்ணி எண்ணி ஏங்கி அவள் அழகிழந்து, பொலிவிழந்து அவன் வருகையை மட்டுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாள். அப்படி அவள் வாடும் நிலையை "பசலை நோய்" என்று குறிப்பிடுகின்றன சங்க இலக்கியங்கள். நோய் என்றால் மருந்து வேண்டும் அல்லவா இதற்கும் மருந்து உண்டு காடுகளில் உள்ள மூலிகைகளில் அல்ல. காதலனது மூச்சில் அவன் பேச்சில் அவன் அரவணைப்பில். இந்தக் கவிதையில் வரும் காதலியின் காதலன் அவளைப் பிரிந்து சென்று இருக்கின்றான். அவளை பசலை நோய் தாக்கி விட்டது. அவள் ...

தேவதையை காதலிப்பவர்கள் கவனத்திற்கு

படம்
என் வீட்டிற்க்கு முதல் முறை வந்த அவள்... இரு கைகள் நீட்டி அவள் பாதம் ஏந்திய வாசல் எதார்த்தமாய் எட்டிப் பார்பது போல்  ஜன்னல் வழி வந்த தென்றல் அவள் அமர்வதற்கு ஏதுவாய் தன்னைச்  சரி செய்து கொண்ட நாற்காலி அதனைப் பொறாமையுடன் பார்த்து ஆடும் ஊஞ்சல் இன்னும் அவளை வேகமாக தீண்ட வேண்டும்  என்ற கோரிக்கையுடன்மின்விசிறியை  கெஞ்சும் காற்று அவள் முகம் கழுவப் போனதும்  கேலியாக என்னைப் பார்த்து சிரித்தபடியே  மூடும் குளியலறைக் கதவு கடலில் கலக்கப் போன கங்கை நதியை  கர்வமாக தாண்டிச் சென்று சொர்க்கத்தில் கலந்த  அவள் முகம் கழுவிய நீர் அவள் முகம் துடைக்க முன்னால் வர வேண்டும்  என்று அலமாரிக்குள் போர் புரிந்து  வென்று என் கையில் சிக்கிய துணி எதிர் பாராத அவள் சமையலறை நுழைவில்  சட்டென்று சிலாகித்து  விசில்அடிக்கும் குக்கர் சாப்பிட அவள் தரையில் அமர்ந்ததை சற்றும்  எதிர்பார்க்காமல் ஆனந்த கண்ணீரில்  சில்லென்று ஆன என் வீட்டுத் தரை சாப்பாடு வருவதற்குள் எப்படியும் அவளை ஒரு முறை  அருகில் பார்க்க வேண்டும் எ...

ஆயிரம் முத்தங்கள்

படம்
அன்று ஆம் அதே அன்று  அவளை முதல் முறை கண்ட கல்லூரியின் முதல் நாள் என் வாழ்க்கையை மாற்றப் போகும் அந்த முதல் நாள் அந்த முதல் பார்வைத் தீண்டலில் தெறித்துச் சிதறியது ஆயிரம் முத்தங்கள் பார்வைத் தாக்குதலில் சற்று பதறிப் போன  நான் நிலை கொண்டது என்னவோ நிலை இல்லாத இடை அசைவில்தான் கணிதத்தின் வடிவங்களில்  எரிச்சல் அடைந்த எனக்கு அந்த வளைவுகள் தான் ஆயிரம் முத்தங்கள் சொட்டச் சொட்ட கனி ரசம் இருந்தும் அதை எட்ட எட்டத் தள்ளி வைக்கும் அந்த இரக்கமற்ற நாட்களில் உன் நுனி விரல் தீண்டல் தான் எனக்கு ஆயிரம் முத்தங்கள் தோழி மட்டுமே நான் என்று நீ பொய் உரைக்க வேலிக்குள் வேகும் என் இதயம் ம்ம்ம் என்று தலை அசைக்க உன் கண்களின் ஓரம் நான் கண்ட காதலில் என் மேல் விழுந்து விலகி ஓடியது ஆயிரம் முத்தங்கள் உடலில் ஒரு தலை போதும் உயிரைத் தாங்க காதலில் ஒரு தலை போதும் உயிரை வாங்க மரணம் வரும் தருவாயில் எல்லாம் எனக்கு உயிர் பிச்சை அளித்த உன் துப்பட்டாத் தீண்டல்கள் தான் ஆயிரம் முத்தங்கள் அந்த நாள் ஆம் அதே நாள் என்னுள் தேக்கி வைத்திருந்த அத்தனைக் காதலையும் நீ கரை உடைத்...

தாயும் ஆனான் அவன்

படம்
நான் நெஞ்சில் மிதிப்பேன் என்று தெரிந்த அன்றே என்னைத் தோள் மேல் தூக்கி உலகத்தைப் பார் என்று காட்டிய என் தந்தைக்கு சமர்ப்பணம் ----------------------------------------------------------------------------------- முத்தம் கொடுத்தால் முகம் நோகும் முறுக்கு மீசை வைத்தது போதும் என்பது உன்  முதல் தியாகம் கரம் ஊண்டி தரையில் நின்றால் பாவம் பிஞ்சு கைகள் நோகும் என்பாய் என் நெஞ்சின் மேல் நடை பழகு என்றாய் நெஞ்சம் சேர்ந்து நான் உறங்கும் வேளையில் மூக்கு முனுமுனுத்து அழுத அன்று உன் நெஞ்சம் சூழ்ந்த உரோம கவசம் துறந்தாய் நீ பிடித்தால் என் விரல் நோகும் என என்னை உன் விரல் பிடிக்க வைக்க நீ கற்றுக் கொண்டாய் புது செருப்பில் உள்ள பொம்மை நோக கூடாதென  நான் நடக்கத் தயங்கி அழுத நேரம் என்னையும் எனக்கு பிடித்த அந்த பொம்மையும் சுமந்துக் கரையான  உன் வெள்ளைச் சட்டையில் தெரிகிறது  கரை படிந்த வெள்ளை நிலா  ஏன் காதலின் சின்னம் என்று முழு நேர அசைவ பிரியனான உன்னை  கொஞ்சம் சைவமாக மாற்றிய பெருமை  என்னவோ உன்னருகில் அமர்ந்து  சாப்பிடும் என்னையே சேரும் என்னைக்...

நடக்கப் பழகிய பறவை

படம்
தாய் மடியையும் தாய் மண்ணையும் விட்டு விட்டு வெளியூரில்/வெளிநாட்டில் தூக்கத்தைத் தேடும் ஒவ்வொரு சகோதர சகோதரிக்கும் இந்த உணர்வுப் பதிவு சமர்ப்பணம்... ----------------------------------------------------------------------------------- எந்திரிடா நேரமாச்சு  எனும் அப்பாவின் கடிதலில் இருந்த பாசம் இன்று என் போன் அலாரத்தில்  இல்லை கொஞ்சம் சாப்டுட்டு போடா எனும் அம்மாவை உதாசினப்படுத்தியது போல் இன்று என் காசில் வாங்கிய உணவை  உதாசினப்படுத்த மனம் வரவில்லை இங்கயே எதாச்சும் வேலை பாரு பா என்று நீங்கள் அன்று என் கை பிடித்து அழுத நியாபகம்  அந்த ஒருநாளைத் தவிர தினம் தினம் வலிக்குதம்மா என்ன டிரஸ் எடுத்துருக்க நல்லாவே இல்ல  என்று நான் அன்று தூக்கி எறிந்த  பெற்றோரின் பிறந்த நாள் பரிசு இன்று எங்க அம்மா அப்பா  நான் காலேஜ் படிகுறப்போ எனக்காக வங்கி தந்த டிரஸ் என்று பிறரிடம் காட்டும் போது கண்ணீர் கன்னத்தில் அறைகிறது அன்று நீங்கள் ஒரு அடி அடித்து விட்டிர்கள்  என்பதற்காக சாப்பிடாமல் நான் தூங்கினேன் பிள்ள பசி தாங்க மாட்டாங்க என்று  நீங்கள் இரவ...

பெண்மையை மாற்றுவோம்

படம்
உயிர்த் துளிக்கு உருவம் தந்த என் அன்னைக்கும் அன்னையின் அடுத்த உருவான என் மனைவிக்கும்  சக உயிரான என் சகோதரிக்கும் மறு உயிரான என் தோழிக்கும் இந்தக் கவிதை சமர்ப்பணம்... ............................................................................... போதுமடி பெண்ணே உன் ரோஜா அவதாரங்கள் முட்களாகவும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் அன்பு ஸ்பரிசங்கள் அனலாகவும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் கடைக்கண் மின்னல்கள் இடிகளாகவும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் மெல்லிசை சிணுங்கல்கள் கர்ஜனைகளையும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் அன்ன நடைகள் வேங்கையகாவும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் அரிகாரங்கள் உண்மைகளையும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் வளைவுகளின் வசியங்கள் நேர்கொண்டு திமிர முயன்று பார் போதுமடி பெண்ணே உன் கலவி போதிக்கும் கல்யாண சுகங்கள் சுயம்புவாகவும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் உரிமை போராட்டங்கள் உதைத்துத் தள்ள முயன்று பார் போதுமடி பெண்ணே உன் போலிப் புன்னகைகள் கோரப் பார்வைகளையும் முயன்று பார் போதுமடி பெண்ணே உன் ரகசிய அழுகைகள் ரௌத்திரமும் முயன்று பார்...

சில்லென்ற தீப்பொறி

படம்
ஒரு கவியாக பெண்மையில் லயித்து பெண்மையில் மயங்கி கவிதை தர முடியாமைக்கு உங்களுக்காக வருந்துகிறேன். ஆனால், பெண்மைக்காக ஒரு கவிதை என்ற நோக்கில் எனக்காக என் சக இனத்திற்காக நான் கர்வம் கொள்கிறேன். கவனம் இவள் சில்லென்ற ஒருத்தி தான் ஆனால், தீப்பொறி சற்று தள்ளி நின்றே ரசியுங்கள் தைரியம் இருந்தால்..... பேதை மடந்தை பரத்தை மலடி? பெற்றாள் பெறுவாள் பெறுகிறாள் அவள் நேற்றும் இன்றும் நாளையும் என்றும்? தொழுதார் தொழுவார் கல்லில் மட்டும் நித்தம் நித்தம் நிசப்தம் நிரந்தரம்? சொன்னால் சொல்வார் உன் நிலை நோக்கென்று நியாயம் தர்மம் தெய்வம் உலகம்? அயர்ந்து தூங்கும் அசையாதிருக்கும் சுயம் சுபம் சமம் சுதந்திரம்? சுட்டார் இட்டார் அவருக்கு போக ஏன் எதற்கு எப்படி இப்படி? அதன் படி இதன் படி உன் பிறப்பே உனக்கு கல்லடி நிதானம் பொறுமை போராட்டம் இறுக்கம்? போதும் போதும் அது பழைய சாதம் எதிர்த்து நிமிர்ந்து திமிர்ந்து உயர்ந்து? உன் சொந்த உறவுகள் உதறும் உதாசிக்கும் தீர்க்கம் தீர்வு முடிவு? உன் உள்ளங்கை உள்ளம் இரண்டும் இரும்பாகட்டும் பெண்மை மென்மை என்னும் தொன்மை? காரி உமிழ்ந்து கசக்கி எரி காற்றில...

சிதறிய சில பார்வைத் துணுக்குகள்

படம்
எங்கே என் ரம்யமான காலை ?? அதோ தெரிகிறது புகைகளுக்குப் பின்னால் எங்கே என் இனிமையான கீதம்??? அதோ அழுகிறது இரைச்சல்களுக்குப் பின்னால் எங்கே என் அழகான அம்மா??? அதோ கருகுகிறாள் வெண்மையான தோசைகளுக்குப் பின்னால் எங்கே என் கம்பீரமான அப்பா??? அதோ உருகுகிறார் உதட்டோர சிரிப்புகளின் பின்னால் எங்கே என் ஆருயிர்த் தோழி??? அதோ பதுங்குகிறாள் அன்பான கணவனுக்குப் பின்னால் எங்கே என் அழகான சகோதரி??? அதோ ஒதுங்குகிறாள் அவள் புகுந்த உறவுகளுக்குப் பின்னால் எங்கே என் அடாவடி அண்ணன்??? அதோ ஓடுகிறான் அவனுக்கென்ற வாழ்க்கையின் பின்னால் எங்கே என் உயிர்த் தோழன்??? அதோ கதறுகிறான் அவன் குடும்பநிலைக்குப் பின்னால் எங்கே என் கலாச்சாரம்??? அதோ பறக்கிறது துப்பட்டாகளுக்குப் பின்னால் எங்கே என் சமுதாயம்??? அதோ சாக கிடக்கிறது ஜாதி மதங்களின் பின்னால் எங்கே என் கடந்த காலம்??? அதோ களவாடப் படுகிறது நவீனமாக்களின் பின்னால் எங்கே என் எதிர்காலம்??? அதோ இறந்து கிடக்கிறது இங்கிலிஷின் பின்னால் எங்கே என் நிகழ் காலம்??? இதோ கண்ணீர் வடிக்கிறது என் கவிதைகளுக்குப் பின்னால் கண்களே!!! க...

தங்கை என்னும் உயிர்ச்சொல்

படம்
தேவதைகள் வானில் தோன்றி பூமியில் விழுந்து மறையும் என்பார்கள் பாவம் அவர்கள் யாருக்கும் ஒரு தங்கை இல்லை என்று நினைக்கிறேன் ஒரு சின்ன ஏக்கம் எப்போதும் உண்டு நாம் இருவரின் குழந்தைப் பருவங்களும் வேறு வேறு ஆனால் உன்னருகில் நான் இருக்கும் போதெல்லாம் என்னை குழந்தையாக மாற்றி விடுகிறாயே? பொதுவாக ஆண்கள் மனைவி வந்த பிறகுதான் கண்ணன் அவதாரம் துறந்து ராமன் அவதாரம் எடுப்பார்கள் ஆனால் என்று உன்னை உணர்ந்தேனோ அன்றே ராமன் ஆனேன் ஆம்! அனைத்து பெண்களும் யாரோ ஒருவருடைய தங்கை தானே முத்தம், அரவணைப்பு, மடியில் துயில்தல், மார்பில் சாய்தல், தோளில் துவளல், கரம் கோர்த்தல், முடி கோவுதல், பாதம் வருடல் இவையெல்லாம் அன்னை, மனைவி சார்ந்த இரு பரிமாணங்களே ! ஆனால் முதல் முதலில் முப்பரிமாணம் நீ, ஒரு ஆச்சரியம்தான் ஆண் என்ற கர்வம் எப்போதும் எனக்குள் உண்டு உன் விசயத்திலும் அது விதி விலக்கில்லை ஆனால், உன்னிடம் நான் கொள்ளும் கர்வம் நீ அடிக்கும் போது வலி மறந்து நடிக்கும் போது மட்டுமே சீக்கிரம் உன் நகங்களின் நீளத்தை குறைக்க வேண்டும் மூடர்களின் வாக்கு, சகோதரி என்பவள்  உன் தந்தையின் ரத்தம் என்பது ரத...

கவி உதிர் காலம்

படம்
என் இனிய சகோக்களே சகிகளே உங்கள் இதயத்தின் மீது குடை பிடித்துக்கொள்ளுங்கள் இது கவி உதிர் காலம்...  சில கவிகள் உங்கள் நினைவுகளை சீண்டலாம் சில கவிகள் உங்கள் உணர்வுகளை உரசலாம் சில குறும்புக்கார கவிகள் உங்கள் இதழோரத்தையும் சில கண்டிப்பான கவிகள் உங்கள் விழியோரத்தையும் ஈரம் செய்யலாம் சில கள்ளதனக் கவிகள் உங்களை களவாடலாம் சில வில்லத்தனக் கவிகள் உங்களை விழுங்கவும் செய்யலாம் சில குழந்தைத்தனக் கவிகள் உங்களிடம் கொஞ்சி விளையாடலாம் சில அன்னைமார் கவிகள் உங்களை அரவணைக்கவும் செய்யலாம் கவனமாக இருங்கள் இது கவி உதிர் காலம்... கவிதைகள் ஜாக்கிரதை... -அருள்