காதல் அளவீடு

தொட்ட சுகம் போதுமென்றால்
முத்தமொன்றில் அளந்திடலாம்
இட்ட முத்தம் போதுமென்றால்
இதழோரம் அளந்திடலாம்
இதழின் ஓரம் போதுமென்றால்
இன்னொரு பிறவியெடுத்தேனும்
அளந்திடலாம்
இதயமதில் நட்டுச் சென்ற காதலை
எங்ஙனம் அளந்திடுவேன்?
கண் மயங்கி கருவி தேடி
என்னம்மா நான் கூற என்று
எண்ணியிருந்த பொழுதினிலே
கண்ணம்மா கவிதை ஒன்று
கனவு தட்ட கண் விழித்தேன்
கவிராஜன் நினைவு கொண்டே
கை நெட்டி நானுடைத்தேன்
அவனறிந்த மொழிதனிலே
தமிழினிமை எங்குமிலையாம்
அவனையறிந்த என்னிடமும்
தமிழினிமை தவிர்த்தெதுவோ?
பிரபஞ்சம் பேசும் பெருந்தமிழே
மௌனமாய் இரு சில நிமிடம்
இது காதல் அளவீடின்
கணிதத் தேர்வு நேரம்
கவனங்கள் தேவை
தேர்வு முடிவுகள் தேவதையிடம் சேர்க்கப்படும்.
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை