நிறைய ரசி கொஞ்சம் வாழ்


எங்கோ கேட்கும் இசையுடன் 
இணையும் இதழ்
காலை முளைக்கும்
இளம் தூக்கம்
இரவு அழுகை துடைக்கும்
இதமான புத்தகம்
சன்னலோர மழையில்
சட்டென்று தோன்றும் கவிதை
மண் தவழும் குழந்தையின்
பின் தொடரும் தந்தை
பூ வைத்த பெண்
அவள் தொட்ட காற்று
நீண்ட நடையில்
நெருங்கிய விரல்கள்
கல்லூரி வாசல்
கடக்கும் போது ஏக்கம்
மாறிய பள்ளிச் சீருடை
மாறாத ஆசிரியர்
சிறு வயதுத் தோழியின்
அதே பாசம்
நெடுநாள் கோபம் கலையும்
சிறிய புன்னகை
மறந்த முகங்களின்
சிறந்த குணங்கள்
கொஞ்சம் தேநீர் தரும்
நிறைய நிம்மதி
உப்பில்லா சமையலின்
தப்பில்லா அன்பு
உடைந்த மனத்தை
ஒத்தடம் கொடுக்கும் முத்தம்
முதல் வேலையின்
முதல் நாள்
பெரும் வெற்றி
தரும் சிறு கண்ணீர்
ஐம்பது வயதில்
அம்மாவின் மடி
எண்பது வயதின்
கலங்கமில்லாக் கலவி
அயர்ந்த தூக்கம்
அதோடு மரணம்
ரசிக்கக் கற்றுக் கொள் வாழ்வது எளிது
-அருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தங்கை என்னும் உயிர்ச்சொல்

ஆயிரம் முத்தங்கள்

பசலை