"நீ"

முதல் காதல் நினைவு முத்தமிடும் குழந்தை முழு நிலவின் தென்றல் தந்தையின் தோழைமை தாய் வருடும் முடி தோழியின் மடி நண்பனின் கடன் மனைவியின் பாதம் கணவனின் கண்ணீர் தூரத்து மெல்லிசை பூக்களின் கூட்டம் நடுக்கடல் சப்தம் வானம் பார்த்த உறக்கம் முதல் வெற்றி ஆழ்ந்த அமைதி துரோகம் தரும் புன்னகை எதிரியின் உதவி மறுக்கப்பட்ட மன்னிப்பு மறக்கப்பட்ட நன்றி மாறி விட்ட உறவுகள் கடைசித் தீண்டல் கலைந்த கனவு மனமறிந்த பொய் உதடு புதைக்கும் மெய் உள்ளங்கை தரும் தைரியம் காமம் தீர்ந்த கலவி பிரசவத்தின் நிர்வாணம் மரணத்தின் நிறைவு தனிமை வறுமை ஏமாற்றம் பசி இவற்றின் முன் உணரப்படும் உன் செயல்கள் தான் உண்மையான "நீ" -அருள்