முள்வேலி முகூர்த்தங்கள்
காபிக் குவளையில் கண் பதித்து
கால் பாதம் கண்டு உருவம் ஊகித்து
காதோர அம்மாவின் கெஞ்சலுக்காகவும்
கால் பிடித்த அப்பாவின் கைகளுக்காகவும்
கழுத்தசைத்து சம்மதம் தெரிவித்து
கால் கடுக்க சபை அமர்ந்து
கண்ணீர்க் காரணம் புகை என்று புன்னகைத்து
கரமொன்றை கவனமாய்ப் பிடித்து
கல்லொன்றில் பாதம் பதித்து
காலி வானம் நிமிர்ந்து பார்த்து
கானல் நீராய் உறவுகள் மறைய
கார் கண்ணாடியில் தலை சாய்த்து
காதல் ஒன்றை கடைசியாய் நினைத்து
கண் இருள புது வீட்டில் கால் பதித்து
கலக்கமாக தனியறையில் மூடப்பட்டு
கடைசிப் பொட்டுத் துணியும் விலகிய நிமிடம்
கண்ணீர்த் துளி ஒன்றில் பதிவு செய்யப் பட்டது
அந்தக் கற்பழிப்பு
-அருள்
கருத்துகள்